கூகுள் பிக்சலுக்கு இணையாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்!
இளையராஜாவுக்கு ஜூன் 2-ல் பாராட்டு விழா!
இசைஞானி இளையராஜாவுக்கு அவரது பிறந்த நாளான ஜூன் 2-ஆம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இசையமைப்பாளா் இளையராஜா மேற்கத்திய - கர்நாடக இசை கலந்த ‘வேலியண்ட்’ பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி அரங்கேற்றினார்.
சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இளையராஜாவை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்தியிருந்தனர்.
லண்டனில் இருந்து இளையராஜா திரும்பியபோதே, அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு தரப்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2 ஆம் தேதியே அவருக்கு அரசுத் தரப்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.