செய்திகள் :

''இவ்வளவு கொடுத்தும், போதவில்லை என அழுகிறார்கள்'' - ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் மோடி மறைமுக தாக்கு!

post image

பாம்பன் கடல் மீது கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் வருகை தந்தார். இதற்கான விழாவில் பங்கேற்ற அவர், ''அன்பு தமிழக சொந்தங்களுக்கு வணக்கம்'' என தமிழில் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ''நன்னாளான ராமநவமி தினத்தில் நீங்கள் அனைவரும் ஜெய் ஶ்ரீராம் என கூறுங்கள். தமிழகத்தின் சங்க கால இலக்கியங்களில்கூட ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது.  உங்கள் அனைவருக்கும் ராமநவமி தின வாழ்த்துகள். இன்று ராமநாதசுவாமி ஆலயத்தில் தரிசனம் செய்தபோது நல் ஆசி கிடைத்தது. அதன் பயனாகவே தமிழ்நாட்டில் 8300 கோடி சாலை திட்டங்களை துவக்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இது பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் பிறந்த பூமி. ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றாக இணைந்தது என்பதை அவரது வாழ்க்கை நமக்கு எடுத்து காட்டுகிறது.

அதைபோல் ஆன்மிகமும் தொழில்நுட்பமும் இணைந்து பயணிப்பதால் 21-ம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதமான பாம்பன் பாலத்தினை அமைத்துள்ளோம். அதனை செய்து முடித்த பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். இந்த புதிய பாலத்திற்கான தேவை பல 10 ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த பாலத்தின் வழியாக ரயில் மற்றும் கப்பலில் விரைவாக பயணிக்க முடியும். அதன் மூலம் சுலபமான வியாபார தொடர்புகள் கிடைக்கும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 2 மடங்காக வளர்ந்துள்ளது. நவீன கட்டமைப்புகள்தான் அதற்கு காரணம். சாலை, ரயில், விமான சேவை, குடிநீர், எரிவாயு போன்ற திட்டங்களுக்கான நிதி 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்புகளே காரணம்.

கொடி அசைத்து ரயில் சேவையை துவக்கிய மோடி
நினைவு பரிசு வழங்கிய தங்கம் தென்னரசு

 நாட்டின் அனைத்து பகுதிகளும் பரஸ்பரம் இணையும் போது தேசத்தின் வளர்ச்சி  சாத்தியம் ஆகிறது. பாரதத்தின் அத்தகைய வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கும் உள்ளது. எனவேதான் திமுக கூட்டணி வகித்த ஆட்சி காலங்களை விட தற்போது 3 மடங்கு நிதியினை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 7 மடங்காக அதிகரித்துள்ளது. இவையெல்லாம் செய்த பிறகும் கூட சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் அழ மட்டும்தான் முடியும். அவர்கள் அழுதுவிட்டு போகட்டும்.

 2014க்கு முன்பு வரை ரயில் திட்டங்களுக்கு வெறும் 900 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அப்போது யார் கூட்டணி ஆட்சியில் இருந்தனர் என நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இப்போது 6 ஆயிரம் கோடி அதிகம் கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கொடுத்துள்ளோம். அத்தகைய கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் எளிதில் மருத்துவம் படிக்க தமிழில் மருத்துவ பாடங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிறோம். தமிழ் மொழி, மரபு உலகின் அனைத்து இடங்களையும் சென்றடைய முயன்று வருகிறோம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சில தலைவர்கள் எனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறார்கள். அந்த கடிதத்தில் அவர்கள் கையெழுத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது. குறைந்தபட்சம் அவர்கள் கையெழுத்தைக்கூட தமிழில் போடாமல் இருப்பது எனக்கு வியப்பை தருகிறது" என்றார்.

LPG: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு; மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை, மத்திய அரசு ரூ. 50 உயர்த்தியிருக்கிறது.மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் அறிவிப்பின்படி, நாளை (ஏப்ரல் 8) முதல் இது நடைமுறைக்கு வரு... மேலும் பார்க்க

'அதிமுகவினர் அண்ணன், தம்பி போல உள்ளோம்; இதனால்தான் செங்கோட்டையன் உள்ளே இருந்தார்' - ஓ.எஸ்.மணியன்

அதிமுகவினர் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்தபோது, செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த தியாகி யார்? என்ற பேட்ஜ் அணிந்த ... மேலும் பார்க்க

யார் அந்த தியாகி: "அவருக்கு பட்டம் கொடுத்த நீங்கதான் சொல்லணும்" - TASMAC வழக்கில் CM-க்கு EPS பதிலடி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற கூட்டத்தில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக `யார் அந்த தியாகி?' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.ஆனால், சட்டமன்றத்தில் தொடர... மேலும் பார்க்க

Congress : `அன்று’ விழுத் தொடங்கிய காங்கிரஸ் இன்னும் எழ முடியாமல் திணறுவது ஏன்? - விரிவான அலசல்!

`முன்னொரு காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இருந்ததாகவும், அதைப் பல முக்கிய அரசியல் தலைவர்கள் வழிநடத்தியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம்' என மக்கள் பே... மேலும் பார்க்க

இபிஎஸ் OUT; செங்கோட்டையன் IN; `காலில் விழுந்த EPS' - `பொம்மை முதல்வர்' - சட்டசபையில் நடந்தது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 7) கூடியது. அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து கவன ஈர்ப்பு நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச எழுந்ததும், சட்டப்பேரவை நேரலை ஒளிபரப... மேலும் பார்க்க

`அந்த தியாகி யார்?' - சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்; காரணம் என்ன?

தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த மாதம் 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் ... மேலும் பார்க்க