செய்திகள் :

``இஸ்மாயில் ஹனியேவின் தலையைப் போல உங்கள் தலைவர்களின் தலையையும் துண்டிப்போம்" -எச்சரிக்கும் இஸ்ரேல்!

post image

ஒரு வருடத்தைக் கடந்து இஸ்ரேல் - ஹமாஸ் குழுவுக்கு மத்தியில் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரகணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேயும், அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் ஈரானில் கொல்லப்பட்டனர். ஆனால், இந்தக் கொலைக்கு எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என இஸ்ரேல் உறுதியாக மறுத்து வந்தது. இந்த நிலையில், காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் வரை தாக்குதல் நடத்துவோம் எனக் கூறும், ஹாமஸ் குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கும், இரானின் ஆதரவு ஹவுதி குழு இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்மாயில் ஹனியே

அதைத் தொடர்ந்து இஸ்ரேல் இரானின் ஹவுதிக் குழுவை கடுமையாக எச்சரித்திருக்கிறது. இது தொடர்பாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், ``ஹவுதி பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசுவதற்கு முன்பு ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன். ​​நாங்கள் ஹமாஸை தோற்கடித்தோம், ஹிஸ்புல்லாவை தோற்கடித்தோம், ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துவிட்டோம், சிரியாவில் அசாத் ஆட்சியை வீழ்த்திவிட்டோம், தீமைகளுக்கு கடுமையான அடியைக் கொடுத்துவருகிறோம்.

ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாத அமைப்பு, கடைசியாக இருக்கிறது. அவர்களின் உள்கட்டமைப்பை சேதப்படுத்தி, தெஹ்ரானில் இஸ்மாயில் ஹனியே, காஸாவில் யஷ்யா சின்வர், லெபனானில் ஹசன் நஸ்ருல்லா போல, ஹவுதி தலைவர்களின் தலையையும் துண்டிப்போம்." எனக் கடுமையாகப் பேசியிருக்கிறார்.

Doctor Vikatan: ஸ்டென்ட், பைபாஸ் தேவையில்லையா... இதய நோயாளிகளைக் காப்பாற்றுமா EECP சிகிச்சை?

Doctor Vikatan: 'உங்களுக்கு நெஞ்சுவலி உள்ளதா, மூச்சுத்திணறல் உள்ளதா, ஆஞ்சியோபிளாஸ்டியோ, அறுவை சிகிச்சையோசெய்து கொள்ள பயமா... தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஈஈசிபி (EECP ) சிகிச்சையைச் செய்துகொள்ள எங்க... மேலும் பார்க்க

ECI - `30% வாக்குகள் வித்தியாசம்!' - பகீர் கிளப்பும் BJD | DMK | BJP | GST | Odisha Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான ‘ஆல் பாஸ்’ முறையை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்துள்ளது. * ‘பொருத்தமற்றது; யூனியன் அரசு பள்ளிகள் தவிர...!’ - கட்டாய பாஸ் ... மேலும் பார்க்க

MGR நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன்... மலர் தூவி அஞ்சலி! |Photo Album

எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதைஎம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதைஎம்ஜிஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதைஎம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா மரியாதைஎம்ஜிஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: டூத் பேஸ்ட்டா, பல் பொடியா... இரண்டில் எது சிறந்தது, கைகளால் பல் துலக்கலாமா?

Doctor Vikatan: என்னுடைய நண்பர் ஒருவர், பல வருடங்களுக்குப் பிறகு டூத் பேஸ்ட் உபயோகிப்பதைநிறுத்திவிட்டு, பல் பொடி பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். மருத்துவர் பரிந்துரைத்ததாகச் சொல்கிறார். பல் துலக்க டூ... மேலும் பார்க்க

Menopause: சிவப்பரிசிப் புட்டு முதல் முருங்கைப் பூ கூட்டு வரை... மெனோபாஸ் உணவுகள்!

இப்போதும் அதே உணவுகள்!உளுத்தங்களிஒரு பெண் பெரிய மனுஷியாகும்போது உளுத்தங்களி, நாட்டுக் கோழி முட்டை, சிவப்பரிசிப் புட்டு என்று சத்தாகக் கொடுத்து உடம்பைத் தேற்றுவதுபோல, மெனோபாஸ் நேரத்திலும் சத்தாக சாப்பி... மேலும் பார்க்க