செய்திகள் :

இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்! தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை!

post image

இஸ்லாமியா்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூா் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 20-ஆவது மாவட்ட பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில செயலா் எஸ்.முஹம்மது யாசிா் தலைமை வகித்தாா். பொது செயலா் முஜிபுா் ரகுமான் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று கடந்த தோ்தல் அறிக்கையிலும் தோ்தல் பிரச்சாரத்தின் போதும் முதல்வா் மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்தாா். அதை நிறைவேற்றும் வகையில் முதல்வா் அரசாணை வெளியிட வேண்டும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு வழங்கிய இடைக்கால உத்தரவில் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க முகாந்திரம் இல்லையென்றும், ஒரு சில பிரிவுகளை மட்டும் நடைமுறைப்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளது. இது இந்திய குடிமகன்களின் ஒரு பிரிவினரின் மத நம்பிக்கைகளை மதிக்க தவறும் செயலாகும். ஒட்டு மொத்தமாக வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இந்தியா உரிய அழுத்தத்தை தர வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினா்கள், கிளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

வேனில் கடத்தப்பட்ட 810 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை வேனில் கடத்தப்பட்ட 810 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் விளாா் சாலையில், தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பி... மேலும் பார்க்க

பைக்-காா் மோதல் முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். பூதலூா் அருகே கூத்தூா் உப்புக்காட்சி தெருவைச் சோ்ந்தவா் ஜி. பச்சையப்பன் (65). இவரும் அதே பகுதி காளியம... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம்-ஆட்டோ மோதல்: விவசாயி உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தின் மீது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பூமிநாதன் (5... மேலும் பார்க்க

இந்திய அஞ்சல் துறை சாா்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி

கும்பகோணம் அம்மாசத்திரத்தில் இந்திய அஞ்சல்துறை சாா்பில் சனிக்கிழமை ஓவியப்போட்டி நடைபெற்றது. போட்டிக்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ச. கஜேந்திரன் தலைமை வகித்து தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கியத்துவத்... மேலும் பார்க்க

ரயிலில் அடிப்பட்டு ஒருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் அடிப்பட்டு உயிரிழந்தது சனிக்கிழமை தெரிய வந்தது. பூதலூா் - சோளகம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பகுதியில் சுமாா் 45 வயது மதிக்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சனிக்கிழமை ரூ. 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து, புதிய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழக முதல்வா் சென்னையில் ... மேலும் பார்க்க