ஈமு கோழி மோசடி : ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.19 கோடி அபராதம் - கோவை நீதிமன்றம் அதிரடி
கொங்கு மண்டலத்தில் மக்களின் ஆசைகளை தூண்டு விட்டு பல்வேறு நூதன மோசடிகள் அரங்கேறின. அதில் ஈமு கோழி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். சுமார் 15 ஆண்டுகளாகியும் ஈமு கோழி மோசடி வழக்கு விசாரணை இப்போதும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-30/ofme8mga/IMG_20250129_WA0028.jpg)
அந்த வகையில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. இவர் சுசி ஈமு ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கினார்.
அந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள், தீவனம், கொட்டகை அமைத்து தரப்படும். இதற்கு பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.6,000 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குவதுடன், ரூ.20,000 போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-30/xefa39cu/IMG_20250129_WA0027.jpg)
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-30/49daqa1w/IMG-20250130-WA0010.jpg)
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-30/j7qgy06e/IMG-20250130-WA0011.jpg)
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கட்டிய பணம் முழுவதுமாக திரும்பி வழங்கப்படும் என்றும் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தார். இதை நம்பி அந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்தனர்.
ஆனால் சொன்னபடி பணம் வழங்காமல் மோசடி செய்ததாக பொள்ளாச்சியைச் சேர்ந்த கண்டியப்பன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிந்து குருசாமியை கைது செய்திருந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-30/z90gmlgi/IMG_20250129_WA0026.jpg)
இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் சிறப்பு டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.19 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs