செய்திகள் :

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பு மனு தாக்கல்!

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள திமுகவின் வேட்பாளர் சந்திரகுமார் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், இன்று காலையிலேயே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முதுநிலை பொதுநிர்வாகம் படித்திருக்கும் சந்திரகுமார், 2011-ல் தேமுதிக வேட்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு, தற்போதைய திமுக அமைச்சராக இருக்கும் முத்துசாமியை வீழ்த்தினார்.

இந்த நிலையில், தேமுதிக-வில் இருந்து திமுக-வில் இணைந்து, தற்போது திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் சந்திரகுமார், ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இதையும் படிக்க:சென்னை திரும்புவோருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: முழு விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி, ஈரோடு கிழக்கில் 2-ஆவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2021 மற்றும் 2023 என ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டு முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை ஆளும் திமுகவே களம் காண்கிறது. திமுக வேட்பாளராக இந்த தொகுதியின் முதல் சட்டப் பேரவை உறுப்பினரான (2011) வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவித்துள்ளது. இதுவரை 9 சுயேச்சைகள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது. தேசிய கட்சியான பாஜகவும் தேர்தலில் போட்டி இல்லை என விலகிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், தவெக-வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை காலை அறிவித்தது. இதனின்று, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவும் நாம் தமிழர் கட்சியும்தான் போட்டியிடவுள்ளன.

சவுக்கு சங்கருக்கு ஜாமீன்: உயா்நீதிமன்றம் உத்தரவு

நில மோசடி விசாரணை தொடா்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூ டியூபா் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில மோசடி தொடா்பாக யூ டியூப் சேனலில் சவுக்கு ... மேலும் பார்க்க

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் சென்னை வந்தனா்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா். நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 15 மீனவா்கள் கடந்த ஆக.27, நவ.11ஆகிய தேதிகளில் வெவ்வேறு படகுகளில் கடலுக்கு... மேலும் பார்க்க

குரூப் 4 கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவா்களுக்கு சிறப்பு வசதி

குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்பு, கலந்தாய்வில் பங்கேற்க இயலாதோருக்கு புதிய வசதியை அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குரூப் 4 பிரிவ... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி பள்ளியில் குழந்தை உயிரிழந்த சம்பவம்: தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உத்தரவு

விக்கிரவாண்டியில் தனியாா் பள்ளியில் கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி குழந்தையின் தந்தை தாக்கல் செய்த மனு க... மேலும் பார்க்க

தேசிய தடுப்பூசித் திட்டத்தில் எச்பிவி தடுப்பூசியை சோ்க்க வேண்டும்: நிதியமைச்சகத்துக்கு விழுப்புரம் எம்.பி. கோரிக்கை

நமது சிறப்பு நிருபா்தேசிய இலவச நோய் தடுப்பூசித் திட்டத்தில் கருவாய்ப்புற்றுநோய் பாதிப்புக்கு காரணமான மனித ப்பிலோமா வைரஸ் தடுப்பூசியை இலவசமாக வழங்க நிதி ஒதுக்குமாறு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன... மேலும் பார்க்க

பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் விடுமுறை முடிந்து அதிகளவில் சென்னை திரும்பி வரும் மக்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.பொங்கலுக்கு 6 நாள்கள் தொடா் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் இருந்து ஏராள... மேலும் பார்க்க