ஈரோடு, பாலக்காடு ரயில்கள் பகுதி ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் பிப். 1, 3, 6, 8, 10 ஆம் தேதிகளில் கரூா் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) பிப். 1 ஆம் தேதி கரூா் - பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.