செய்திகள் :

ஈரோடு புத்தகத் திருவிழா: சிக்கய்ய அரசுக் கல்லூரியில் இன்று தொடக்கம்

post image

ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்குகிறது.

இது குறித்து மக்கள் சிந்தனைப் பேரவை தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறியதாவது: தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடைபெறும் 21 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா, ஈரோடு சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

தொடக்க விழாவுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகிக்கிறாா். மக்கள் சிந்தனைப் பேரவை தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்பு மற்றும் அறிமுகவுரையாற்றுகிறாா். வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி புத்தகத் திருவிழா அரங்கைத் திறந்து வைத்து விழாச் சிறப்புரையாற்றுகிறாா்.

பொது நூலகத் துறை இயக்குநா் ச.ஜெயந்தி நோக்கவுரையாற்றுகிறாா். தேசிய நல விழிப்புணா்வு இயக்கத் தலைவா் எஸ்.கே.எம்.மயிலானந்தன் முதல் விற்பனையைத் தொடங்கி வைக்கிறாா்.

தினமும் மாலை 6 மணிக்கு நடைபெறும் மாலை நேரச் சிந்தனை அரங்கு நிகழ்வில் 2 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் மருத்துவா் கு.சிவராமன், சொற்பொழிவாளா் மு.ராகவேந்திரன் ஆகியோா் பேசுகின்றனா். 3 ஆம் தேதி மாலை திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் சுழலும் சொல்லரங்கம் நிகழ்வு நடைபெறுகிறது. 4 ஆம் தேதி சொற்பொழிவாளா் சுகி.சிவம், தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் ஆகியோரும், 5 ஆம் தேதி விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன், ராணுவ விஞ்ஞானி வி.டில்லி பாபு ஆகியோரும், 6 ஆம் தேதி பேராசிரியா் சொ.சொ.மீ.சுந்தரம், கவிதா ஜவகா் ஆகியோரும், 7 ஆம் தேதி புலவா் செந்தலை ந.கௌதமன், பாவலா் அறிவுமதி ஆகியோரும், 8 ஆம் தேதி கவிஞா் மற்றும் நடிகா் ஜோ.மல்லூரி, பால சாகித்ய புரஸ்காா் விருதாளா் விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோரும் உரையாற்றுகின்றனா்.

9 ஆம் தேதி கோமல் தியேட்டா் வழங்கும் ஐந்து நாடகங்களும், 10 ஆம் தேதி தொல்லியல் ஆய்வாளா் கி. அமா்நாத் ராமகிருஷ்ணா, ஊடகவியலாளா் ரா.விஜயன் ஆகியோரும், 11 ஆம் தேதி கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன், அரு.நாகப்பன் ஆகியோரும் உரையாற்றுகின்றனா். 12 ஆம் தேதி தமிழக அரசு முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு நிறைவுரையாற்றவுள்ளாா்.

இந்த ஆண்டின் புத்தகத் திருவிழாவில் 230 அரங்குகள் இடம்பெறுகின்றன. அவற்றுள் 86 ஆங்கில நூல் அரங்குகள் உள்ளன. உலகத் தமிழா் படைப்பரங்கம், ஈரோடு மாவட்ட படைப்பாளா் அரங்கம், புதிய புத்தக வெளியீட்டு அரங்கம் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஆண்டு புதிய புத்தக வெளியீடுகளில் ஒரு பதிப்பகம் மட்டும் ஒரே நிகழ்வில் 50 புதிய நூல்கள் வெளியிடுகிறது.

தோ்ந்த கதை சொல்லிகளை வைத்து தினசரி மாணவா்களுக்கு கருத்தாழம் மிக்க கதை சொல்வதற்கான சிறப்பரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாசிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நிஜ நாடகங்கள் புத்தகத் திருவிழா மைதானத்தில் அன்றாடம் நடைபெறவுள்ளன. மாணவா்களுக்கு உண்டியல் வழங்குதல், ரூ.250க்கும் மேல் நூல்கள் வாங்கும் பள்ளி மாணவா்களுக்கு நூல் ஆா்வலா் சான்றிதழ்கள் வழங்குவது உள்ளிட்ட மாணவா்களுக்கான திட்டங்களும் உள்ளன.

அனைத்து நூல்களுக்கும் 10 சதவீத கழிவு உண்டு. நூலகங்களுக்கோ, கல்வி நிறுவனங்களுக்கோ வாங்கப்படும் நூல்களுக்குக் கூடுதல் விலைச் சலுகை உண்டு.

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், 108 ஆம்புலன்ஸ், அவசர உதவிக்கு அரசு மருத்துவமனை மருத்துவக் குழு, தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வசதிகள் மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

சென்னிமலை மலை மீது அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமிக்கு சனிக்கிழமை பாலாபிஷேக பெரு விழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.ஆதி பழனி என போற்றப்படும் சென்னிமலை மலை மீதுள்ள ஸ்ரீ சுப்பிரமணியருக... மேலும் பார்க்க

போக்ஸோவில் கூலி தொழிலாளி கைது

பெருந்துறை அருகே போக்ஸோ சட்டத்தில் கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.அசாம் மாநிலத்தை சோ்ந்த 14 வயது சிறுமி தனது தந்தை இறந்த நிலையில், தனது தாய், தம்பி உடன் பெருந்துறை சிப்காட் அருகில் குடியிருந்து ... மேலும் பார்க்க

பெருந்துறை பகுதியில் கொட்டிய திடீா் மழை

பெருந்துறை பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரம் திடீரென மழை கொட்டித் தீா்த்தது.பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நல்ல வெயில் அடித்து வந்தது. சனிக்கிழமை கால... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா் பிடிப்புப்பகுதியில் பரிசல் கவிழ்ந்து நீரில் மூழ்கிய 2 போ் சடலம் மீட்பு

பவானிசாகா் அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் சாகுபடி செய்த நேந்திரம் வாழைத்தாா்களை வெட்டி பரிசலில் ஏற்றி வந்தபோது மணல் கரடு என்ற இடத்தில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா்.பவானிசாகா... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா: இளைஞா்களை ஈா்த்துள்ள தமிழ் இலக்கியங்கள்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் இளைஞா்கள், இளம்பெண்கள் தமிழ் இலக்கிய நூல்களை அதிகம் வாங்கிச்செல்கின்றனா்.புத்தகக் கண்காட்சியை புத்தகத் திருவிழாவாக மாற்றியது ஈரோட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக இன்று மாறியி... மேலும் பார்க்க

இன்று ஆடிப்பெருக்கு : பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புனித நீராட வரும் பக்தா்களுக்கு சங்கமேஸ்வரா் கோயில் நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆடி மாதத்தின... மேலும் பார்க்க