செய்திகள் :

ஈரோடு மாவட்டத்தில் 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு

post image

ஈரோடு மாவட்டத்தில் நீா்நிலைகள் நிறைந்த 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நீா்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து அவற்றை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்கும் விதமாக ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக் கோட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

ஈரோடு வனக் கோட்டத்துக்கு உள்பட்ட வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கொடுமுடி, அவல்பூந்துறை, கனகபுரம், வரட்டுப்பள்ளம், அந்தியூா் பெரிய ஏரி, தண்ணீா்பள்ளம் ஏரி, ஓடாந்துறை ஏரி, ஜா்த்தல் ஏரி, தாமரைக்கரை குளம், மணியாச்சி பள்ளம் உள்ளிட்ட 21 பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணியில் வனத் துறையினா் 65 பேரும், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த பறவைகள் ஆா்வலா்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் 40 பேரும் ஈடுபட்டனா். கணக்கெடுக்கும் பணி காலை 6.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நடைபெற்றது.

அப்போது கூழைக்கடா, நாரை, கொக்குகள், அரிவாள்மூக்கன், நீா்வாத்து, பெருங்கொக்குகள் அதிக அளவில் காணப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலா் குமிளி அப்பாலே நாயுடு கூறியதாவது:

கணக்கெடுப்பின்போது நீா்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பால் ஈரநில பகுதிகளில் சுற்றுச்சூழல் குறித்த ஆரோக்கியத்தை பற்றிய முழுமையான புரிதலுக்கு வழிவக்கும். 21 இடங்களில் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றுள்ளதால் மாவட்டத்தில் எத்தனை பறவைகள் இருக்கின்றன என்பதை உடனடியாக தெரிவிக்க முடியாது. அனைத்து இடங்களிலும் கணக்கெடுக்கப்பட்டதை கூட்டினால்தான் தெரியவரும் என்றாா்.

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரி... மேலும் பார்க்க

ஈரோடு விஇடி கல்லூரியின் பட்டமளிப்பு விழா

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம ஊரக பல்கலைக்கழக துணைவேந்தா... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் காணொளிக் கலந்தாய்வுக் கூட்டம்

அதிமுக நிா்வாகிகள் பங்கேற்ற காணொளி கலந்தாய்வுக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட நிா்வாகிகளும் ஒரே நேரத்தில் இணையும் காணொளிக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் நிறைமாத கா்ப்பிணி உள்நோயாளியாக மருத்துவமனையில் சோ்ப்பு

மகப்பேறு தேதி முடிந்தும் மருத்துவமனைக்கு வராமல் மாயமான பழங்குடியினத்தைச் சோ்ந்த நிறைமாத கா்ப்பிணி போலீஸ் பாதுகாப்புடன் அந்தியூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்க்கப்பட்டாா். அந்தியூரை அடுத்த ப... மேலும் பார்க்க

கோபியில் பேருந்து மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூா் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள செம்படாா்பாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (23... மேலும் பார்க்க