பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிக் கொண்டாட்டம்! ஒன்றுகூடிய நடிகர்கள்!
ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!
சென்னையில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை ராமபுரத்தில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் ஆண்டுதோறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி "ஹோம் கம்மிங் '25" என்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கல்லூரி முதல்வர் டாக்டர் பி. தெய்வசுந்தரி வரவேற்பு உரை நிகழ்த்தி நிகழ்வை தொடக்கிவைத்தார். முன்னாள் மாணவர்களின் சாதனைகள் குறித்த இதழ் வெளியிடப்பட்டது.
எஸ்ஆர்எம்(ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகம்) தலைவர் டாக்டர் ஆர். சிவகுமார் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.
முன்னாள் மாணவர் விவகாரங்கள் துறை தலைவர் டாக்டர் எஸ். உஷா மேனன், எஸ்ஆர்எம்ஐஎஸ்டி ராமாபுரம் நிறுவனத்தின் அறிவியல் மற்றும் மனிதவியல் துறை தலைவர் டாக்டர் எஸ். திருமுருகன் ஆகியோர் விழாவில் பேசினர். இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நினைவுகளைக் கொண்டாடவும் நிறுவனத்திற்கு எதிர்கால ஒத்துழைப்புகளை வளர்க்கவும் முக்கியமான சந்திப்பாக இது இருந்ததாக முன்னாள் மாணவர்கள் குறிப்பிட்டனர்.