செய்திகள் :

உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரிய வீரர்கள்: உறுதி செய்தது ரஷியா!

post image

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் ஈடுபட்டதை ரஷிய ராணுவம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தலைமையில் இருநாடுகளுக்கு இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தப் போரில் ரஷியா படைகளுடன் இணைந்து வடகொரியா மற்றும் சீனாவின் வீரர்கள் உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வருவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய வீரர்களுடன் இணைந்து வடகொரிய வீரர்கள் சண்டையிட்டதாக ரஷிய ஆயுதப்படைகளின் தலைவர் வலேரி கெராசிமோவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைனின் படையெடுப்பை முறியடிக்க ரஷிய வீரர்களுடன் தோளோடு தோள் நின்று வடகொரிய வீரர்கள் சண்டையிட்டனர் என உறுதி செய்த வலேரி கொராசிமோவ், வடகொரிய வீரர்கள் போரில் திறன்பட செயல்பட்டதாகப் புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஈரான்: கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து; 516 பேர் காயம்

ஈரான் துறைமுக விபத்து: பலி 14 ஆக உயர்வு; 750 பேர் காயம்!

ஈரானின் தெற்குப் பகுதி துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 14 போ் உயிரிழந்தனா்; 750 போ் காயமடைந்தனா். அந்த நாட்டின் ஹோா்மோஸ்கன் மாகாணம், பண்டாா் அப்பாஸ் நகருக்கு தென்மேற்கே அமைந்து... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸின் உடல் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. 266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிரிட்டன்: இந்தியா - பாக். போராட்டக்காரா்கள் மோதல்; பாக். தூதரக அதிகாரிகள் மிரட்டல்!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக லண்டனில் இந்திய வம்சாவளி குழுவினா் பாகிஸ்தான் தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு எதிராக பாகிஸ்தானை சோ்ந்தவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அ... மேலும் பார்க்க

கூா்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்பு!

தங்களின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினா் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது. இது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்... மேலும் பார்க்க

சிங்கப்பூா் தோ்தல்: முகநூல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் முகநூல் மூலம் தலையிடுவதைக் கட்டுப்பபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டுள்ள... மேலும் பார்க்க

ஈரான்: கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து; 115 பேர் காயம்

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி வெடிவிபத்தில் 115 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வ... மேலும் பார்க்க