செய்திகள் :

உக்ரைன்: கிறிஸ்துமஸ் நாளில் ஏவுகணை தாக்குதல்! மின் விநியோகம் கடுமையாக பாதிப்பு

post image

கீவ்: கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் உக்ரைனில் ரஷிய ராணுவத்தின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் அந்நாட்டின் மின் உற்பத்தி மற்றும் மின் விநியோக நிலையங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவை போலவே ‘ஜூலியன் காலண்டர்’ முறையை பின்பற்றும் உக்ரைனிலும், கிறிஸ்துமஸ் பண்டிகை ஜனவரி 7-ஆம் தேதி கொண்டாடப்படுவதே வழக்கமாக இருந்து வந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டபின், மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படுவதைப் போன்றே உக்ரைனிலும் கடந்த ஆண்டிலிருந்து, டிசம்பர் 25-ஆம் தேதியே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், ரஷிய படைகள் இன்று(டிச. 25) உக்ரைனின் பல பகுதிகளில் வான் வழி தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கிறது.

கிறிஸ்துமஸ் நாளான இன்று அதிகாலையிலேயே கருங்கடல் பகுதியிலிருந்து டிரோன்கள், கலிஃப்ர் க்ரூஸ் ரக ஏவுகணைகள் பல உக்ரைனை நோக்கி ஏவப்பட்டதாகவும், இதன் காரணமாக உக்ரைனில் அதிகாலை 5.30 மணியளவில் அபாய ஒலி ஒலிக்கத் தொடங்கியதையடுத்து மக்கள் பதற்றத்துடன் எழுந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைனில் மின் நிலையங்களை குறிவைத்து சுமார் 170-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டுள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொறியாளர்கள் மின் விநியோகத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் வான் வழி தாக்குதல்களில் டினிப்ராபெட்ரோவ்ஸ்க் பகுதியில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்துள்ளனர். சுமார் 50 ஏவுகணைகளை உக்ரைன் விமானப்படை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் இந்த ஏவுகணைத் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இதனை ‘மனிதநேயமற்ற’ செயல் என்று விமர்சித்துள்ளார்.

அஜர்பைஜான் விமான விபத்தில் 38 பேர் பலி! 29 பேர் காயம்

அஜர்பைஜான் விமான விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளதாக கஜகஸ்தான் அரசு தகவல் தெரிவித்துள்ளது. அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று(டிச. 26) பு... மேலும் பார்க்க

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்!

தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை(டிச.26) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.இது குறித்து தேசிய நில அதி... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு: அதிகாரபூா்வமாக உறுதி செய்த பைடன்

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் அதிபா் ஜோ பைடன் கையொப்பமிட்டு அதை உறுதி செய்தாா். வட அமெரிக்காவைப் பூா்விகமாகக் வெண்தலைக் கழுகு, கடந்த 1782-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்

உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட புதன்கிழமை அந்த நாட்டு மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா மிகத் தீவிர தாக்குதலை நடத்தியது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் மின் விநியோகக் கட... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தை இழுபறி: இஸ்ரேல்-ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையிலும், ஒப்பந்தத்தை எட்டுவதில் இழுபறி நீடித்துவருவதற்கு இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டியுள்ளன. ... மேலும் பார்க்க

2024: உலகின் தேர்தல் களங்களும் பதற்றங்களும்!

தெருவோரங்களில் ஆரம்பித்து செவ்வாய்க் கிரகம் செல்ல திட்டமிடும் நாடுகளின் அரங்கு வரையில் அரசியல் பேச்சும் விளையாட்டுகளும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், மெகா தேர்தல் ஆண்டாக அமைந்த 2024, ... மேலும் பார்க்க