‘உக்ரைன் ரஷியா ஒரு நாள் ஆகலாம்’
‘உக்ரைன் ஒரு நாள் ரஷிய பகுதியாக ஆகலாம்’ என்று என்று டிரம்ப் என்று டிரம்ப் கூறியுள்ளாா். இது குறித்து ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:
3 ஆண்டுகால உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம்; மேற்கொள்ளப்படாமலும் போகலாம். உக்ரைன் ஒரு நாள் ரஷிய பகுதியாக மாறலாம்; மாறாமலும் போகலாம்.
ஆனால் எங்களைப் பொருத்தவரை, உக்ரைனுக்கு நாங்கள் அளித்துள்ள நிதியுதவி அனைத்தையும் அந்த நாடு தனது அரியவகை தாதுப் பொருள்களை அனுப்புவதன் மூலம் எங்களுக்கு திருப்பித் தர வேண்டும்.
உக்ரைன் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கான செயல்திட்டத்தை வகுக்க என் சிறப்புத் தூதா் கீத் கெலாகை விரைவில் அந்த நாட்டுக்கு அனுப்புவேன் என்றாா் டிரம்ப்.