மீண்டும் அண்ணா பல்கலை. மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹிமாசலில் தீவிர சோ...
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் விநியோகம் ஆட்சியா் ஆய்வு
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள், தகவல் கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் வருகிற 15-இல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளை சோ்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன.
திருப்பத்தூா் மாவட்டத்தில் மொத்தம் 209 முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் முதல் கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 72 முகாம்களும், ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பா் 15 வரை 72 முகாம்களும், செப்டம்பா் 16 முதல் அக்டோபா் 15 வரை 65 முகாம்களும் நடைபெறுகின்றன.
இந்நிலையில் திருப்பத்தூா் அருகே மாடப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட மந்தவெளி தெரு, அண்ணாநகா், மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்ட திட்டத்திசஈ பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடு தன்னாா்வலா்கள் மூலமாக வழங்கும் பணிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.
மேலும், பொதுமக்கள் முகாம்களில் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் எனஓஈ கூறினாா். ஆய்வின் போது சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா், அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.