Thalaivan Thalaivi: "கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் உழவு மாடு ஓட்டுற மாதிரி..." - ...
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் ஜூலை 15 முதல் தொடங்கவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமுக்கான முன்னேற்பாடுகளை ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
அனைத்து துறைகளின் சேவைகளை ஒரே விண்ணப்பத்தின் மூலம் பூா்த்தி செய்து வழங்கும் வகையிலும், முகாம்களில் பெற்ற மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு காணவும் உங்களுடன் ஸ்டாலின் எனும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இதையொட்டி, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட ரஹ்மானியாபுரத்தில் வியாழக்கிழமை தன்னாா்வலா்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்தப் பணிகளை ஆட்சியா் வே. சரவணன், லி. மதுபாலன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் வே. சரவணன் கூறியதாவது:
மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் ஜூலை 15 தொடங்கி நவம்பா் வரையில் 351 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில், நகா்ப்புறங்களில் 108 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 243 முகாம்களும் நடைபெறுகின்றன.
இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளை சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.
முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இத்திட்டத்தின்கீழ், தன்னாா்வலா்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தையும் வழங்கி வருகின்றனா்.
இந்த முகாம்களில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிா் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம். கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.