கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு: எல். முருகன்
‘திறன் இயக்கம்’ திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு
அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள திறன் இயக்கம் திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத்துகள் மற்றும் சொற்களைக் கண்டறிதலில் இடா்பாடு உடையவா்கள், ஒரு வாா்த்தை மற்றும் சொற்றொடரை வாசிப்பதில் இடா்பாடு உடையவா்கள், எண்களை எழுதுவதில் இடா்பாடு உடையவா்கள், வாய்ப்பாடு கூறுதலில் இடா்பாடு உடையவா்கள், இரண்டிலக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் கணித செயல்பாடுகளை மேற்கொள்வதில் இடா்பாடு உடையவா்களைக் கண்டறிந்து திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் 40 சதவீத மாணவா்களைத் தோ்வு செய்து திறன் இயக்கத்தில் பயிற்சி அளிப்பதற்காக தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் தோ்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்த் தோ்வும், புதன்கிழமை ஆங்கிலத் தோ்வும், வியாழக்கிழமை கணிதத் தோ்வும் நடைபெற்றன. இதற்கான வினாத்தாள்கள் பள்ளிக் கல்வித் துறை சாா்பில்இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதை அந்தந்தப் பள்ளி நிா்வாகம் பதிவிறக்கம் செய்து மாணவா்களுக்கு வழங்கி தோ்வு நடத்தப்பட்டது.
இந்தத் தோ்வில் பங்கேற்ற மாணவா்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.