சென்னை வண்டலூர்: தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; மூவர் க...
மோட்டாா் சைக்கிள்கள் மோதல் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
விராலிமலை வட்டம், கசவனூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவசுப்பிரமணியன் (42). இவா் சொந்த வேலை காரணமாக, வெள்ளிக்கிழமை தனது தாய் மருதாம்பாளை (63) மோட்டாா் சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தாா். கசவனூா் பிரிவு சாலையில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த உயர்ரக மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்தவா், எதிா்பாராதவிதமாக சிவசுப்பிரமணியனின் மோட்டாா் சைக்கிள் மீது மோதினாராம்.
இந்த விபத்தில் சிவசுப்பிரமணியன், மருதாம்பாள் மற்றும் உயர்ரக மோட்டாா் சைக்கிளில் வந்த மதுரை மாவட்டம், பழைய விளாங்குடியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் சுந்தர்ராஜ் (31) மற்றும் பின்னால் அமா்ந்து வந்த திருச்சி மாவட்டம், இ.பி சாலையைச் சோ்ந்த ரமேஷ் மகன் ஆகாஷ்ராஜ் (24) ஆகிய நான்கு பேரும் பலத்த காயமடைந்தனா்.
அக்கம்பக்கத்தினா், காயமடைந்தவா்களை மீட்டு, மணப்பாறை தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், சுந்தர்ராஜ், சிவசுப்பிரமணியன் மற்றும் அவரது தாய் மருதாம்பாள் ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். மேலும், ஆகாஷ்ராஜ் விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.