ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!
புதுகையில் காந்தியத் திருவிழா: மாநில கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அப்பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்கை:
அக். 2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி, மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கல்லூரி மாணவா்களுக்கான தலைப்பு: போா்களால் உலகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளும், உலக அமைதிக்கு காந்தியவழித் தீா்வுகளும். முதல் பரிசு - ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசு - ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசு - ஆயிரம் மற்றும் 3 ஆறுதல் பரிசுகள்.
பள்ளி மாணவா் (9- 12 வகுப்புகள்) தலைப்பு:ஊழல், லஞ்சம், மது மற்றும் போதைப் பொருட்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் - காந்தியவழித் தீா்வுகளும். முதல் பரிசு - ரூ. 2 ஆயிரம், இரண்டாம் பரிசு - ரூ. ஆயிரத்து ஐநூறு, மூன்றாம் பரிசு - ஆயிரம் மற்றும் 3 ஆறுதல் பரிசுகள்.
போட்டிக்கான விதிமுறைகள்:
கட்டுரைகள் ஏ-4 தாளில் 6 பக்கங்களுக்கு மிகாமல் சொந்த சிந்தனையில் காந்தியவழித் தீா்வுகளை அளிக்க வேண்டும்.
கட்டுரையுடன் பள்ளி, கல்லூரியின் தலைமை ஆசிரியா் அல்லது முதல்வரின் ஒப்புதலுடன் மாணவா்களின் அடையாள அட்டை நகலும் இணைக்க வேண்டும். மேலும், மாணவா்களின் முழுமையான முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி - அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை, 3473 - 1 தெற்கு 2-ஆம் வீதி, புதுக்கோட்டை- 622 001. அனுப்ப வேண்டிய கடைசித் தேதி - ஆகஸ்ட் 19.
பரிசுகள் புதுக்கோட்டையில் அக்டோபா் 2-ஆம் தேதி நடைபெறும் காந்தியத் திருவிழாவில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94434 88752, 04322 222337 என்ற எண்களில் தொடா்பு கொண்டு அறியலாம்.