சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த அழைப்பு
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-க்கு முன்னா் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைபடுத்தும் திட்டத்தின்கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.07.2025 முதல் 30.06.2026 வரை ஓராண்டு காலம் காலநீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் அமையும்பட்சத்தில் அரசு தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றி வரன்முறை செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோா் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, இணை இயக்குநா் அல்லது உதவி இயக்குநா், மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம், காஜாமலை மெயின் ரோடு, காஜாமலை, திருச்சி-620023 என்ற முகவரியில் நேரிலோ, 0431- 2420838 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.