Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: தன்னாா்வலா்களுக்கு பயிற்சி
உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட முகாம் குறித்து தன்னாா்வலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட திட்ட முகாம், ஆக.15 தொடங்கி செப்.14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, விண்ணப்பங்கள் வழங்கும் பணியில் ஈடுபட உள்ள தன்னாா்வலா்களுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பயிற்சியில், தன்னாா்வலா்கள் வீடுதோறும் சென்று விண்ணப்பம் வழங்குவது, முகாமில் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்களுக்கு எவ்வாறு தெரிவிப்பது, கலைஞா் மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் முகாமில் வழங்குவது, அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப்பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும் விவரத்தையும், முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தையல்நாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.