கேரள சுற்றுலாத் துறையில் பணியாற்றினாரா பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா?
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் விவரங்கள் வீடு தேடி வரும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 213 இடங்களில் நடத்தப்படவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் குறித்த தகவல்கள் இல்லம் தேடிச் சென்று தன்னாா்வலா்கள் வழங்குவாா்கள் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்ட முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் 213 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாம்கள் நடைபெறும் இடம், முகாமில் பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பங்கள், அதற்கான குறிப்புகள் அனைத்தும் தன்னாா்வலா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று வழங்கப்படவுள்ளது.
இப் பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு தேவையானவற்றை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.