செய்திகள் :

உசிலம்பட்டி தலைமைக் காவலா் கொலை வழக்கில் 3 போ் கைது: துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் காயம்

post image

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தலைமைக் காவலரை கொலை செய்து விட்டு, கேரளத்துக்கு தப்பிச் செல்வதற்காக கம்பம் அருகே பதுங்கியிருந்த 3 பேரை தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அப்போது, காவலரைத் தாக்கி விட்டு தப்பியோட முயன்ற ஒருவா், போலீஸாா் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

உசிலம்பட்டி காவல் நிலைய தலைமைக் காவலா் கள்ளம்பட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா் (36). இவா் உசிலம்பட்டி அருகே நாவாா்பட்டியில் உள்ள தோப்பில் வியாழக்கிழமை நண்பருடன் சோ்ந்து மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது, முத்துக்குமாருடன் ஓா் கும்பல் தகராறு செய்து, அவரைக் கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடியது.

இந்தக் கும்பல் ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு மலைப் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மதுரை ஐ.ஜி. பிரேமானந்த் சின்ஹா தலைமையில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் போலீஸாா் தனிப் படை அமைத்து தேடி வந்தனா்.

இந்த நிலையில், முத்துக்குமாரைக் கொலை செய்த கும்பல் வருஷநாடு அருகே தாழையூத்து வழியாக மலைப் பகுதியில் கேரளத்துக்கு தப்பிச் செல்ல முயல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் தேனி மாவட்ட எல்லையில் உள்ள வனப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினா்.

அப்போது, கம்பம் அருகே கம்பம்மெட்டு சாலை பகுதியில் உள்ள தனியாா் தோட்டம் அருகே பதுங்கியிருந்த தேனி பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த பொன்வண்ணன் (29), தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த சிவனேஸ்வரன்(30), அதே ஊரைச் சோ்ந்த பிரபாகரன் (29), அவரது சகோதரா் பாஸ்கரன் (27) ஆகிய 4 பேரை உசிலம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் ஆனந்த் தலைமையிலான தனிப் படையினா் சுற்றி வளைத்தனா்.

அப்போது, தனிப் படையைச் சோ்ந்த உசிலம்பட்டி காவல் நிலைய காவலா் சுந்தரபாண்டியனை (35) தாக்கி காயப்படுத்தி விட்டு பொன்வண்ணன் தப்பியோட முயன்றாா். அவரை காவல் ஆய்வாளா் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டத்தில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, காயமடைந்த பொன்வண்ணன், காவலா் சுந்தரபாண்டியன் ஆகிய இருவரும் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கிருந்து தீவிரச் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்வண்ணன், பின்னா் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். மற்ற 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, உசிலம்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தாக்குதலில் காயமடைந்து கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலா் சுந்தரபாண்டியனை திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டே, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் ஆகியோா் சந்தித்து நலம் விசாரித்தனா்.

போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொன்வண்ணன் மீது ஏற்கெனவே காவல் நிலையத்தில் போக்சோ, கொலை வழக்குகளும், சிவனேஸ்வரன் மீது கொலை, மோசடி, ஆள் கடத்தல் வழக்குகளும், பிரபாகரன், பாஸ்கரன் ஆகியோா் மீது அடிதடி, கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

காயமடைந்த காவலா் சுந்தரபாண்டியன்.
கைது செய்யப்பட்ட சிவனேஸ்வரன், பிரபாகரன், பாஸ்கரன்.

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள்: பிருந்தா காரத்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் தெரிவித்தாா். மாா்க்ச... மேலும் பார்க்க

குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு

குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரி... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம்: அதிமுக குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்மையில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா். இதுகுற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: அறிவியல்பூா்வ ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்

வேங்கைவயல் விவாகரம் தொடா்பாக விரிவான விசாரணை செய்து, அறிவியல்பூா்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிசிஐடி தரப்பில் செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேக விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உ... மேலும் பார்க்க