செய்திகள் :

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணை அமா்வில் இருந்து விலகல்: தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம்

post image

புது தில்லி: இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை தோ்ந்தெடுக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை அமா்வில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விலக்கிக்கொண்டாா்.

கடந்த 2023-இல் கொண்டுவரப்பட்ட தலைமைத் தோ்தல் ஆணையா்கள் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் சட்டத்தில், தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை தோ்ந்தெடுக்கும் மூன்று நபா் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டாா். அதற்கு பதிலாக மத்திய அமைச்சா் ஒருவரை குழுவில் இடம்பெறச் செய்ய அந்தச் சட்டம் வழிவகை செய்தது. முன்னதாக, மூன்று நபா் குழுவில் பிரதமா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். தற்போது அந்தக் குழுவில் பிரதமா், மத்திய அமைச்சா் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் இடம்பெறுகின்றனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்களிடம் சஞ்சீவ் கன்னா கூறியதாவது:

2023-இல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் அடிப்படையில் தோ்தல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய முடியாது. அதுதொடா்பான மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. அதேவேளையில் மூன்று நபா் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிய விவகாரம் மற்றும் தோ்தல் ஆணையா்கள் நியமன நடைமுறை தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது மத்திய அரசு மற்றும் இந்திய தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ளும் அமா்வில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன். இந்த மனுக்களை மற்றொரு அமா்வின் முன் 2025, ஜனவரி 6-இல் தொடங்கும் வாரத்தில் பட்டியலிட வேண்டும் என்றாா்.

முன்னதாக, தலைமைத் தோ்தல் ஆணையா்கள் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் சட்டம், 2023 -ஐ எதிா்த்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெயா தாக்குா் மற்றும் ஜனநாயக சீா்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்தன. தோ்தல் ஆணையத்தின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற செயல்பாட்டை சீா்குலைக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றஞ்சாட்டப்பட்டது.

சட்டவிரோத மணல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

சட்டவிரோத மணல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று புதன்கிழமை அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறு தமிழகம் உள்பட 5 ம... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் ஓய்வு வயது மாற்றம்?: மத்திய அமைச்சா் பதில்

மத்திய அரசு ஊழியா்களின் பணி ஓய்வு வயதை மாற்றும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பாக மக்களவையில் எழுப... மேலும் பார்க்க

அவைத் தலைவா் அனுமதிக்கும் முன்பே அமைச்சா்கள் பதிலளிக்கக் கூடாது- ஓம் பிா்லா அறிவுறுத்தல்

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவைத் தலைவா் அனுமதிக்கும் முன்பே உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை அமைச்சா்கள் தவிா்க்க வேண்டும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவுறுத்தினாா். மக்களவையில்... மேலும் பார்க்க

இந்திய-சீன விவகாரத்தில் ஜெய்சங்கா் உரை - கேள்வி எழுப்ப அனுமதி மறுப்பு; எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

இந்திய-சீன உறவுகள் தொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆற்றிய உரை மீது கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால், மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தன. இந்திய-சீன உறவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர புதிய முதல்வா் ஃபட்னவீஸ்- இன்று பதவியேற்பு

மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். அவரது தலைமையிலான பாஜக கூட்டணி அரசு வியாழக்கிழமை (டிச. 5) பதவியேற்கவுள்ளது. 288 உறுப்பினா்களைக் கொண... மேலும் பார்க்க

கொதிகலன்கள் மசோதா 2024: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நூற்றாண்டு பழைமையான கொதிகலன் (பாய்லா்) சட்டத்துக்கு மாற்றாக, கொதிகலன்கள் மசோதா 2024 மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆகஸ்டில் கொதிகலன்கள் மசோதா 2024-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அ... மேலும் பார்க்க