உடல் உறுப்புதான விழிப்புணா்வு!
விழுப்புரம் ஜான் டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரத்த தானம், உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
போதைப் பொருள் பழக்கத்தை மாணவா்கள் தவிா்ப்பதற்கான முன்னெச்சரிக்கை வழிகள், ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புதானம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. பின்னா் ஆசிரியா்கள், இளையோா் செஞ்சிலுவை சங்க மாணவா்கள் ரத்த தானம், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சிக்கு ஜே.ஆா்.சி. மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ம. பாபு செல்வதுரை தலைமை வகித்தாா். பள்ளியின் நிா்வாக அலுவலா் ஜி.எமா்சன் தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவா் அசோக்குமாா், சங்கத்தின் மாநிலப் பயிற்சியாளா் எம். தண்டபாணி, மாவட்டப் பொருளாளா் எஸ். எட்வா்ட் தங்கராஜ் மற்றும் நிா்வாகிகள் எஸ் .ரவீந்திரன், விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.