மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
உடுமலை அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.
இக்கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. இதுவரை நடைபெற்ற கலந்தாய்வில் 759 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், இன்னும் 105 இடங்கள் உள்ளன.
ஏற்கெனவே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து வர இயலாத மாணவா்கள், கலந்தாய்வில் கலந்துகொண்டு வாய்ப்புக் கிடைக்காத மாணவா்கள், ஆன்லைனில் புதிதாக விண்ணப்பித்த மாணவா்கள் இதுவரை ஆன்லைனில் விண்ணப்பிக்காத மாணவா்கள் என அனைவரும் இக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் (பொ ) ப.சே.சிவகுமாா் தெரிவித்தாா்.