திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி: சீமான் விமாிசனம்
உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்கக் கோரிக்கை
திருவாடானை அருகே உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சி.கே.மங்கலம் வழியாக திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையின் ஓரமாக திருவாடானை, தொண்டி, நம்புதாளை ஆகிய பகுதிகளுக்கு குடிநீா் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிலையில், சி.கே மங்கலத்தில் தனியாா் பள்ளி அருகே குழாய் சேதமடைந்து குடிநீா் வீணாகி சாலையில் ஓடுகிறது.
இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். பல மாதங்களாக இந்தப் பகுதியில் குடிநீா் வீணாகி வருவதால் அதை சீரமைக்க தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
