மின்சாரம் பாய்ந்து 5 ஆடுகள் உயிரிழப்பு
திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து 5 ஆடுகள் உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பூசாரியேந்தல்
கிராமத்தில் ஆடு, மாடு, கோழி வளா்த்தல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு வியாழக்கிழமை மாலை மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வயல்காட்டு பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பி மீது நடந்து சென்ற 5 ஆடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதுகுறித்து தகவலறிந்த மின்வாரியப் பணியாளா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மின்சாரத்தை துண்டித்தனா். உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடை வருவாய்த் துறையினா் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.