முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ராமநாதபுரம் முத்து மாரியம்மன் கோயில் முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜை.
ராமேசுவரம், செப்.26: ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு முத்துமாரியம்மன் கோயில் 86-ஆம் ஆண்டு முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த 23-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், அந்தப் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.