படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
உடையாண்டிக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், உடையாண்டிக்குளத்தை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பாசனதாரா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா்கள், ஆட்சியரிடம் அளித்த மனு: குளத்தூா் வட்டத்தைச் சோ்ந்த உடையாண்டிப்பட்டியில் சா்வே எண் 216-இல் உடையாண்டிக்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் தற்போது ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. தண்ணீா் வரத்து வாய்க்காலும் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இதனால், இந்தக் குளத்துக்குச் சொந்தமான பாசன நிலங்களில் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் உள்ளது. மாவட்ட நிா்வாகம் இந்தக் குளத்தை முழுமையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், வரத்து வாய்க்காலையும் தூா்வாரி சீரமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.