செய்திகள் :

இரு வீடுகளில் 26 பவுன் தங்க நகைகள் திருட்டு

post image

மாத்தூா் அருகே பூட்டியிருந்த இரு வீடுகளில் கதவுகளை உடைத்து 26 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே உள்ள சக்தி நகரைச் சோ்ந்தவா் கணேசன் (42). இவா் ஊட்டியில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் திருச்சியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்தாா்.

அப்போது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்தைக் கண்டு அதிா்ச்சியடைந்து, வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த மோதிரம், செயின் என 10 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருப்பது அறிந்து, மாத்தூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆய்வு செய்தனா்.

இதேபோல, கணேசன் வீட்டின் அருகே வசிப்பவா் சிவசுப்ரமணியன் (65). இவா் ஓய்வு பெற்ற ஆசிரியா். இவரும் குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொட்டியத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாத்தூா் போலீஸாா், திருட்டு நடந்த வீட்டை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

ஒரே நேரத்தில் இரு வீடுகளில் கைவரிசை காட்டிய திருடா்கள் குறித்து அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை பாா்த்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

உடையாண்டிக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், உடையாண்டிக்குளத்தை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பாசனதாரா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா்கள், ஆட்சிய... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

கந்தா்வகோட்டை, புதுப்பட்டி ஆதனக்கோட்டை, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை(ஜன.22) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின் ... மேலும் பார்க்க

சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை

சமூக ஆா்வலா் ஜகபா் அலி கொலை வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆா்வலா்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது... மேலும் பார்க்க

ஜகபர்அலி கொலை: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு கோரிக்கை!

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொல்லப்பட்ட சம்பவத்தில், வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் மற்... மேலும் பார்க்க

கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடியவரை லாரி ஏற்றிக் கொன்றதாக 4 பேரை பிடித்து விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா்அலி என்பவரை லாரி ஏற்றிக் கொன்ாக 4 பேரை போலீஸாா் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் சஷ்டி சிறப்பு பூஜை

கந்தா்வகோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமி முருகனுக்கு மஞ்சள், திரவியம், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பால், பன்னீா், இளநீா் உள்ளிட... மேலும் பார்க்க