செய்திகள் :

உணவுக்கு பின் சாப்பிடும் ”பான்” கலாசாரம்; இந்தியாவிற்கு வெற்றிலை எப்போது வந்தது தெரியுமா?

post image

இன்று பலருக்கு பான் பீடாவாக அறியப்படும் இது 5000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும், இலை என்று பொருள்படும் ’பர்னா’ என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பான் (வெற்றிலை) உருவானதாக கூறப்படுகிறது.

வெற்றிலை என்று அழைக்கப்படும் இது, இந்திய உணவு கலாசாரத்தில் நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளது.

இந்திய புராணங்கள் முதல் ஆயுர்வேதம் வரை இதன் மதிப்பு இன்றியமையாததாக

உள்ளது. எப்போது இந்த பான் இந்தியாவிற்கு வந்தது என்பது குறித்தும் அதன் சிறப்பு அம்சம் குறித்தும் தெரிந்துக்கொள்ளலாம்.

வெற்றிலையை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பேரைக் கொண்டு அழைக்கின்றனர். மலையாள மற்றும் தமிழ் பெயர்களின் முறையே வெட்டிலா மற்றும் வெட்டிலை என ஒத்த ஒலியைக் கொண்டுள்ளன. கன்னடத்தில், வெற்றிலை என்பது தாம்பூலா, மணிப்பூரியில் குவா மற்றும் மராத்தியில் நாகவேலா என்று அழைக்கப்படுகிறது.

இந்திய புராணத்தில் வெற்றிலை

ராமாயணத்தில் கூட வெற்றிலை மெல்லுதல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அயோத்தி காண்டத்தில், பகவான் ராமர் பசியைக் கட்டுப்படுத்த வெற்றிலையை மென்று ஓய்வு நேரத்தை செலவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீதாதேவி இலங்கை அடையும்போது அனுமானுக்கு வெற்றிலை மாலை கொடுத்ததாகவும், இது சீதையால் அவருக்கு அன்பு மற்றும் நன்றியின் அடையாளமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்தியாவில் திருமணம் சடங்குகளில் வெற்றிலை மற்றும் பாக்கு இன்றியமையாத ஒரு பொருளாக மாறி இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

வெற்றிலையிலையும் அதன் பங்கும்

இந்தியாவின் வடக்கு அல்லது தெற்கு என எந்த பகுதியிலும் இந்த வெற்றிலை மங்களகரமான சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அப்படி ஒவ்வொரு பகுதியிலும் வெற்றிலைக்கு ஒரு சிறப்பு உள்ளது.

அதன்படி மைசூரில் சிறப்பு சந்தர்ப்பங்களின் போது நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக வெற்றிலைகள் பரிசாக வழங்கப்படுகின்றன.

அசாமில் உணவுக்குப் பிறகு வருகை தரும் விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக இது வழங்கப்படுகிறது.

துர்கா பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் அல்லது பல்வேறு மதச் சடங்குகளின் போது இந்த வெற்றிலை இலைகள் இல்லாமல் அந்த சுப நிகழ்வு முழுமை அடையாது.

இது மட்டும் இல்லாமல் மருத்துவ பயன்பாட்டிற்கும் வெற்றிலையை பயன்படுத்துகின்றனர். பொதுவாக தண்ணீரில் வெற்றிலையை சேர்ப்பதால் அவை தண்ணீரை சுத்திகரிக்கும் என்று நம்புகின்றனர்.

ஆயுர்வேதத்தில் வெற்றிலை

ஆயுர்வேதத்தின் படி வெற்றிலை செரிமானத்தை மேம்படுத்தும். தொண்டை தொடர்பான நோய்களுக்கு நன்மை பயக்கும். பசியின்மை, மலச்சிக்கல் ஆகியவற்றை நீக்கும். ஆரம்ப காலத்தில் இது இயற்கையான சிவப்பு நிறத்தை அளிப்பதால் பெண்கள் உதடுகளை அழகாக மாற்ற இதனை பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

எப்போது வெற்றிலை இந்தியாவிற்கு வந்தது?

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் இந்தியாவிற்கு புகையிலை அறிமுகப்படுத்தப்பட்டபோது தொடங்கியதாகக் கருதப்படுகிறது. "வெற்றிலை" என்ற பெயரும் முதன்முதலில் 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் பயன்படுத்தப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று, இந்தியா மற்றும் வங்காளதேசம் முழுவதும் கிட்டத்தட்ட 32 வகையான இலைகள் பயிரிடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Hydrogen Bomb: `ஹிரோஷிமாவை விட 700 மடங்கு ஆபத்து' - கார்வின் கண்டுபிடிப்பு; 50 ஆண்டுகள் ரகசியம் ஏன்?

50 ஆண்டுகள் வெளியே சொல்லாத ரகசியம்உலகின் முதல் ஹைட்ரஜன் வெடிகுண்டைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி ரிச்சர்ட் எல்.கார்வின் (Richard L Garwin) கடந்த மே 13-ம் தேதி தனது 97-வது வயதில் மரணித்துள்ளார். கார... மேலும் பார்க்க

இந்திரா காந்தி கடைசியாக நடந்து வந்த பாதை! - வரலாறுப் பேசும் அருங்காட்சியகம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மாட்டு வண்டியில் ஒரு மாதம் பயணித்து தப்பித்த உண்மை கதை! - ரங்கோன் பூகம்ப நினைவலை| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க