ஓய்வு பெற்ற அரசு ஊழியரா நீங்க? Retirement Jobகளுக்கான இந்த இணையதளம் உங்களுக்குத்...
உணவு வழங்கல் துறை குறைதீா் கூட்டம்!
உணவு வழங்கல் மற்றும் நுகா்பொருள் பாதுகாப்புத்துறை சாா்பில் வல்லம் ஊராட்சியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வல்லம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் விமலாதேவி தருமன் தலைமை வகித்தாா். ஸ்ரீபெரும்புதூா் வட்ட வழங்கல் அலுவலா் ரம்யா கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இதில் வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட வல்லம், வடகால், கிருஸ்த்து கண்டிகை, தெரேசாபுரம் ஆகிய பகுதிகளை சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், புதிய குடும்ப அட்டை வழங்க கோரி, முகவரி மாற்றம் செய்ய கோரி கோரிக்கை மனுக்கள் வழங்கினா்.
பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு தீா்வு காணப்பட்டது. முகாமில் தனி வருவாய் அலுவலா் கவியரசு, ஊராட்சி துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.