செய்திகள் :

உதகையில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

post image

உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு  தலைமையில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கல்லுாரி மாணவா்களிடையே தமிழா்களின் மரபையும் தமிழ் பெருமிதத்தையும் உணா்த்தும் வகையில்  தமிழ்க் கனவு நிகழ்ச்சி அரசின் சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது.

நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினரிடையே கொண்டு செல்வதற்காக அரசு இந்நிகழ்ச்சியை நடத்துகிறது.

அதன்படி, உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், அரசுத் துறை அலுவலா்கள் என பலா் பங்கேற்றனா்.

உதகை மலை ரயிலில் எடை குறைக்கப்பட்ட பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம்

உதகை மலை ரயிலில் எடை குறைக்கப்பட்ட பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற உதகை மலை ரயில் தற்போது வரை பழைமை மாறாமல் இயக்கப்பட்டு வருவதால் உள்நாடு மட்டுமின்றி வ... மேலும் பார்க்க

உதகையில் ஆக. 23முதல் சிறப்பு மலை ரயில் சேவை

மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா் மாதம் இரண்டாம் பருவம் தொடங்கவுள்ள நிலையில், சிறப்பு மலை ... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி உதகை ஆட்சியா் அலுவலக சாலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு சத்துண... மேலும் பார்க்க

உதகை படகு இல்ல நுழைவாயில், டிக்கெட் கவுன்டா் கூரை மீது மரங்கள் முறிந்து விழுந்தன

உதகையில் காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தேனிலவு படகு இல்லத்தின் நுழைவாயில் மற்றும் கட்டணம் வசூலிக்கும் கூரை மீது பெரிய மரங்கள் முறிந்து விழுந்ததால் படகு இல்லம் ... மேலும் பார்க்க

பூக் குண்டத்தில் இருந்து 4 மாதங்களுக்குப் பிறகு தீப் பிழம்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா முடிவடைந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு குண்டம் இறங்கும் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை தீப் பிழம்பும், புகையும் வந்ததால் பரப... மேலும் பார்க்க

உதகை குடியிருப்புப் பகுதியில் நாயை வேட்டையாடிய சிறுத்தை

உதகையில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த நாயை வேட்டையாடி அருகே உள்ள வனத்துக்குள் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியோகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உதகை நகர... மேலும் பார்க்க