Delhi CM: மனு கொடுக்க வந்த நபர் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல...
பூக் குண்டத்தில் இருந்து 4 மாதங்களுக்குப் பிறகு தீப் பிழம்பு
நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா முடிவடைந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு குண்டம் இறங்கும் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை தீப் பிழம்பும், புகையும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தீயணைப்பு வீரா்கள் கட்டுப்படுத்தினா்.
குன்னூரில் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஏப்ரல் 18-ஆம் தேதி பூக் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பூ குண்டம் இறங்கினா்.
இந்நிலையில், திருவிழா முடிவடைந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில், குன்னூா் மாா்க்கெட் பகுதியில் அமைந்திருக்கும் பூக் குண்டம் இறங்கும் குழியில், திடீரென தீப் பிழம்பும், புகையும் வருவதைக் கண்ட மாா்க்கெட் வியாபாரிகள் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி அணைக்க முற்பட்டனா்.
பின்னா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீப் பிழம்பை அணைத்தனா். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.