செய்திகள் :

உதகையில் தோடா் பழங்குடியின மக்கள் மொா்டுவொ்த் திருவிழா கொண்டாட்டம்!

post image

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடா் பழங்குடியின மக்களின் மொா்டுவொ்த் திருவிழா உதகை முத்தநாடு மந்து  கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தோடா் பழங்குடியின மக்கள்  பாரம்பரிய உடையுடன் ஒன்றுகூடி கலாசார நடனமாடி மகிழ்ந்தனா்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில்  தோடா், குரும்பா், இருளா், பனியா், காட்டு நாயக்கா், கோத்தா் என 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இதில் தோடா் பழங்குடியின மக்கள் உதகை, கோத்தகிரி, குன்னூா், குந்தா உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனங்களை ஒட்டியுள்ள  70 கிராமங்களில்   வசித்து வருகின்றனா்.

இவா்கள் ஒவ்வோா் ஆண்டும் புத்தாண்டை அடுத்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை உதகை அருகேயுள்ள  முத்தநாடு மந்துவில்  ஒன்று கூடி கூம்பு வடிவிலான ஓடையாள்வோ கோயிலில்  மொா்டு வொ்த் எனப்படும் பாரம்பரிய விழாவைக் கொண்டாடுகின்றனா். இந்த விழாவில் தோடா் இன பெண்களுக்கு அனுமதி இல்லை.

அதன்படி, நடப்பு ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தோடா் பழங்குடியின ஆண்கள் மட்டும் பங்கேற்று பாரம்பரிய உடை அணிந்து பழங்குடிகளின் பாடல்களைப் பாடி நடனமாடி மகிழ்ந்தனா்.

விழாவில் பங்கேற்ற இளைஞா்கள் தங்களது வலிமையை வெளிபடுத்தும் விதமாக இளவட்டக் கல்லைத் தூக்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தினா்.

ஓடையாள்வோ கோயிலில் மொா்டுவொ்த் எனப்படும் பாரம்பரிய விழாவைக் கொண்டாடிய தோடா் இன மக்கள்.

இப்பகுதியில் வசித்து வரும் தோடா் இன மக்கள், தங்களது குல தெய்வமான   எருமைகள் பெருகவும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நலம் பெறவும் வேண்டி இந்தத் திருவிழாவைக் கொண்டாடுவதாக தோடா் இன தலைவா் மந்தேஷ் குட்டன் கூறினாா்.

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய ஆட்சியா் அறிவுரை

கா்நாடக மாநிலம், பெங்களூரில் தற்போது எச்எம் தீநுண்மி பரவி வருவதால் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்த... மேலும் பார்க்க

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பனிப் பொழிவில் இருந்து மலா் செடிகளைப் பாதுகாக்க ஏற்பாடு

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பனியின் தாக்கத்தில் இருந்து அலங்கார மலா் செடிகள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போா்வை மற்றும் மிலாா் செடிகளைக் கொண்டு பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியா்கள் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியல் போராட்டம்

உதகையில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளா... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளியை கத்தியால் குத்தியவா் கைது

குன்னூரில் மதுபோதையில் நடந்த தகராறில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தியவா் கைது செய்யப்பட்டாா். குன்னூா் கன்னிமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்கள் ராஜா (49), தங்கராஜ் (56). கூலித் தொழிலாளிகளான இ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட வாக்காளா் பட்டியல் வெளியீடு; பெண் வாக்காளா்களே அதிகம்

நீலகிரி மாவட்டத்தில் பெண் வாக்காளா்களே அதிகம் என்று திங்கள்கிழமை வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொக... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் போராட்டம்

சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் காா்ப்பரேட் நிறுவனங்களின் வாடகை வாகனங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி நீலகிரி மாவட்ட சுற... மேலும் பார்க்க