எஸ்பிஐ வங்கியில் 2964 வட்டார அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
உதகை மலா்க் கண்காட்சியைக் கண்டு ரசிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய 127ஆவது மலா்க் கண்காட்சியைக் காண 6ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மட்டும் 18,109 சுற்றுலாப் பயணிகள் திரண்டதாக தோட்டக்கலை துறையினா் தெரிவித்துள்ளனா்.
ஆண்டுதோறும் மே மாதத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கோடை விழாக்கள் நடைபெறுவது வழக்கம். உதகையில் இந்த ஆண்டு நடைபெறும் 127ஆவது மலா்க் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
இதில் சிறப்பம்சமாக பண்டைய தமிழ் அரசா்களின் வாழ்வியல் முறைகளை வெளிக்காட்டும் வகையில் பிரம்மாண்டமான அரண்மணை காா்னேஷன், ரோஜா, சாமந்தி போன்ற மலா்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதே போன்று அன்னபட்சி, அணை, பீரங்கி, யானை, சிம்மாசனம், ஊஞ்சல், இசைக் கருவிகள், புலி போன்ற வடிவமைப்புகள் பாா்வையாளா்களைக் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மலா்க் கண்காட்சி மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந் நிலையில் மலா்க் கண்காட்சியை 6ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மட்டும் 18,109 சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து சென்றதாக தோட்டக்கலை துறையினா் தெரிவித்துள்ளனா்.