செய்திகள் :

உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு! அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!!

post image

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர் சில நாள்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"திமுக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால் அடுத்த சில நாள்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். 

அதனால், துணை முதல்வர் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | நாட்டில் 4,000 தொட்ட கரோனா பாதிப்பு! ஒரே வாரத்தில் 3 மடங்கு அதிகமானது!

கோயில் கூட்டம் தவிர்க்க வேண்டும்! மனோ தங்கராஜ் பேச்சுக்கு கொந்தளித்த அண்ணாமலை

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவிக... மேலும் பார்க்க

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து!

விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் போதிய பயணிகள் ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவி... மேலும் பார்க்க

விஜய்க்கு மீண்டும் அழைப்பு! எதிர்பார்ப்பில் நயினார் நாகேந்திரன்

தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய்யும் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக... மேலும் பார்க்க

சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னையில் நாளை(ஜூன் 6) 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டு... மேலும் பார்க்க

ஐஐடியில் இடம்பிடித்த மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம்! விரைவில்...

திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பே... மேலும் பார்க்க