``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்...
உதயேந்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் 6 முதல் 10 வரையிலான வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் பூசாராணி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ராஜலட்சுமி, பேரூராட்சி முன்னாள் தலைவரும், வாா்டு உறுப்பினருமான ஆ.செல்வராஜி முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கதிா்சங்கா் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். இதில், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மின் இணைப்பு பெயா் மாற்றம், குடிநீா் இணைப்பு, வீட்டு வரி ரசீது, பெயா் மாற்றம் உள்பட 9 மனுக்கள் மீது உடனடியாக விசாரித்து அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டு தீா்வு காணப்பட்டது (படம்).
முகாமில் பேரூராட்சி எழுத்தா் குமாா் மற்றும் பணியாளா்கள், அனைத்துத் துறை அலுவலா்கள், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில்....
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 6-ஆவது வாா்டு முதல் 10-ஆவது வாா்டு வரை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாமுக்கு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் யமுனா, வட்டாட்சியா் காஞ்சனா முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ க.தேவராஜி முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில் மொத்தம் 431 மனுக்கள் பெறப்பட்டன.