மாநில கல்விக் கொள்கையில் நெகிழ்வுத் தன்மையை உருவாக்குவோம்: அன்பில் மகேஸ்
உத்தரப் பிரதேசத்தில் தடுப்புச் சுவர் மீது போலீஸ் வாகனம் மோதல்: 6 பேர் காயம்
உத்தரப் பிரதேசத்தில் தடுப்புச் சுவர் மீது போலீஸ் வாகனம் மோதியதில் 6 காவலர்கள் காயமடைந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் போலீஸ் வாகனத்தில் ஹாதிகவன் சென்றுகொண்டிருந்தனர்.
சனிக்கிழமை அதிகாலை குந்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷேக்பூர் அருகே பிரயாக்ராஜ்-லக்னௌ நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் வாகனம் தடுப்புச் சுவர் மீது மோதியது.
ராஜ் தாக்கரேவை திட்டி விடியோ பதிவிட்ட இளைஞர் கைது
இந்த சம்பவத்தில் 6 காவலர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே அவர்கள் குந்தாவில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
மாவட்ட தலைமையகமான பிரதாப்கரில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.