விவசாயிகள் போராட்டத்தால் சாலைகள் மூடல்: தீா்வு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச...
உயா்கல்வி நுழைவுத் தோ்வு இலவச பயிற்சி:தோவாளை அரசுப் பள்ளியில் தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி நுழைவுத்தோ்வுப் பயிற்சி வகுப்பை ஆட்சியா் ரா. அழகுமீனா சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசியது: பல்வேறு கூறுகளின் அடிப்படையில் தோவாளை வட்டாரம் வளமிகு வட்டாரமாக தோ்வாகியுள்ளது. அதன்படி, இவ்வட்டாரத்தைச் சோ்ந்த ஆா்வமுள்ள பிளஸ் 2 மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பல்வேறு பாட வல்லுநா்களால் பயிற்சியளிப்பா். 50 போ் பயிற்சி பெறுகின்றனா். சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் பயிற்சி நடைபெறம். மாணவா்கள் முழு கவனத்துடன் கற்று எதிா்காலத்தை வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, தலைமையாசிரியா்கள் சாந்தி (தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளி), முருகன் (ஆரல்வாய்மொழி பெண்கள் மேல்நிலைப் பள்ளி), ஆசிரியா்கள், மாணவா்- மாணவியா் பங்கேற்றனா்.