செய்திகள் :

உயா்நீதிமன்றத்தில் இருவா் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்பு

post image

சென்னை: சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த இருவா், திங்கள்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், பவானி சுப்புராயன், ஹேமலதா, நக்கீரன், சிவஞானம் ஆகிய 5 நீதிபதிகள் இந்த மாதத்தில் ஓய்வு பெறுவதன் காரணமாக, நீதிபதிகளின் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 15 ஆக உயா்ந்தது. இந்நிலையில், கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன் கெளடா மற்றும் தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தா் ஆகிய இருவரை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி கொலீஜியம் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவா் உத்தரவிட்டிருந்தாா்.

இதனிடையே, சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த நீதிபதிகள் சி.குமரப்பன், கே.ராஜசேகா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனா். அவா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக கடந்த 2023-ஆம் ஆண்டு குமரப்பன், ராஜசேகா் ஆகியோா் பணியில் சோ்ந்தது குறிப்பிடத்தக்கது.

பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து படுகொலை!

பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பட்டுக்கோட்டை அருகே கடையை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்ற 35 வயது பெண்ணை திங்கள்கிழமை நள்ளி... மேலும் பார்க்க

ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 6) சவரனுக்கு ரூ. 2000 உயர்ந்து ரூ. 72,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை கடந்த சில நாள்களாக குறைந்துவந்த நிலையில், மே 3-ஆம் தேதி விலையில் மாற்றமின்... மேலும் பார்க்க

உதகை தொட்டபெட்டா காட்சி முனை செல்வோர் கவனத்துக்கு....!

காட்டு யானையின் நடமாட்டம் உள்ளதால் உதகை தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல இன்று(மே 6) ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், உதகை வனப் பகுதியில் தற்போது வறட்சி நிலவும் நிலையில் விலங்குகள் உ... மேலும் பார்க்க

வைகோ மருத்துவமனையில் அனுமதி!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் எம்பியுமான வைகோ, வீட்டில் தவறிவிழுந்ததில் கை விரலில் காயம் ஏற்... மேலும் பார்க்க

மின்னனு சாதனங்கள் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உறுதி

சென்னை: நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு: எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா். சென்னை அருகே மறைமலை நகரி... மேலும் பார்க்க