கரூர் கூட்ட நெரிசல் பலி: உச்ச நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நயினார் நாகேந்...
உயிரிழந்த ஊராட்சி பெண் ஊழியரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி
ஆலங்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த ஊராட்சிப் பெண் பணியாளரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை சனிக்கிழமை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினாா்.
ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்த பிரசாத் மனைவி சிவநிதா (36). சேந்தன்குடி ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக வேலை பாா்த்து வந்த அவா், செப்.3-ஆம் தேதி நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
இந்நிலையில், சேந்தன்குடியில் உள்ள உயிரிழந்த சிவநிதாவின் வீட்டுக்குச் சென்ற பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்துக்கான காசோலையை சிவநிதாவின் குடும்பத்தினரிடம் வழங்கினாா். அப்போது, ஆட்சியா் மு.அருணா உடனிருந்தாா்.