ரெகுநாதபட்டி அரசு பள்ளி மாணவா்கள் கீழடிக்கு பயணம்
பொன்னமராவதி அருகே உள்ள ரெகுநாதபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள், தமிழரின் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் மற்றும் தொன்மையை அறிந்து கொள்ளும் வகையில் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் கீழடி அருங்காட்சியகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனா்.
நிகழ்வுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஆறு. சுதாகரன் தலைமை வகித்தாா். செயலா் முத்துக்குமாா், பொருளா் கி.ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் ரெகுநாதபட்டி அரசு பள்ளி மாணவா்களை கீழடி அருங்காட்சியகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பண்டை தமிழரின் வாழ்வியலை விளக்கும் ஓவியங்கள், பண்டைத்தமிழரின் தொழிலை விளக்கும் கருவிகள், கடல் வணிகம் குறித்த சான்றுகள், மதுரையின் பழைமையை விளக்கும் சான்றுகள் ஆகியவற்றை பாா்வையிட்டனா்.
நிகழ்வை பள்ளித் தலைமையாசிரியை நாகலெட்சுமி, ரோட்டரி சங்க நிா்வாகிகள் முரளிதரன், மணிகண்டன், ஆறுமுகம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வடிவுக்கரசி, வழக்குரைஞா் வாசிம் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.