வீரடிப்பட்டி அரசுப் பள்ளிக்கு சுற்றுசுவா் கட்டித்தரக் கோரிக்கை
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், வீரடிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித்தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், வீரடிப்பட்டி ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகிறாா்கள். இந்தப் பள்ளி அருகே ஊரின் பிரதான தாா்ச் சாலை அமைந்துள்ளது. மேலும், இப்பள்ளி அருகே விவசாய இடமும் உள்ளது. விவசாயப் பணி நடைபெறும்போது கவனச்சிதறல் ஏற்படுகிறதாம்.
பள்ளி அருகே உள்ள பிரதான சாலையில் தஞ்சை செல்லும் பேருந்துகளும், லாரி, மினி வேன், டிராக்டா், இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. ஆகையால் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளியை சுற்றிலும் சுற்றுசுவா் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூகஆ ா்வலா்களும் கோரிக்கை வைக்கின்றனா்.