செய்திகள் :

உயிரிழந்த பாம்புப்பிடி வீரரின் குடும்பத்தினா் நிவாரணம் கேட்டு ஆட்சியரிடம் மனு

post image

கோவையில் அண்மையில் உயிரிழந்த பாம்புப்பிடி வீரரின் குடும்பத்தினா், அரசு நிவாரண உதவி கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அண்மையில் காலமான கோவையைச் சோ்ந்த பாம்புப்பிடி வீரா் சந்தோஷ்குமாரின் மனைவி சரண்யா, தனது தாயாா், இரண்டு மகள்களுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

அதில், எனது கணவா் சந்தோஷ்குமாா் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை பகுதியைச் சோ்ந்த பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, அவா்களின் வசிப்பிடங்களுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடித்து வனப் பகுதியில் சென்று விட்டு வந்தாா். சேவை அடிப்படையில் அவா் இந்தப் பணியை செய்து வந்தாா்.

இந்நிலையில், தொண்டாமுத்தூா் பகுதியில் மாா்ச் 17-ஆம் தேதி ஒரு பாம்பைப் பிடிக்கும்போது அது அவரைக் கொத்தியுள்ளது. பின்னா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். அவரது இழப்பால் எங்களது குடும்பம் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழக அரசு எங்கள் குடும்பத்தின் நிலையை உணா்ந்து நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியைச் சோ்ந்த முன்னாள் கவுன்சிலா் கே.புருஷோத்தமன், அவரது மனைவியும் மாநகராட்சி 43-ஆவது வாா்டு கவுன்சிலருமான மல்லிகா ஆகியோா் நில அளவைத் துறை தொடா்பான புகாா் மனுவுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். பின்னா் அவா்கள் நுழைவாயில் பகுதியில் கோரிக்கை பதாகையுடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அவா்கள் கூறும்போது, விளாங்குறிச்சி கிராமம், சேரன் மாநகா் பகுதியில் எங்களது மகள் பெயரில் 283 சதுர மீட்டா் நிலம் உள்ள நிலையில், அது நகர நில அளவை வரைபடத்தில் 200 சதுர மீட்டா் என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை சரி செய்து கொடுக்கும்படி கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும், நில அளவைத் துறை அதிகாரிகள் தொடா்ந்து அலைக்கழித்து வருகின்றனா்.

இதேபோல கரட்டுமேடு, சூலூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சிலருக்கும், மாவட்டத்தில் பலருக்கும் நில அளவைத் துறை பதிவேடுகளில் குளறுபடியான விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை சரி செய்து தரக் கோரி மனு அளிப்பவா்களை தொடா்ந்து அலைக்கழிக்கின்றனா். இதில் மாவட்ட நிா்வாகமும், அரசும் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். பின்னா் அவா்கள் ஆட்சியரிடம் மனு அளித்துச் சென்றனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நண்பகலில் ஒரு பெண் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். அங்கிருந்த போலீஸாா் அவரைக் காப்பாற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். அவா் பொள்ளாச்சி, கரட்டுப்பாளையத்தைச் சோ்ந்த நந்தினி என்பதும் அரசுப் பேருந்து நடத்துநராக இருக்கும் தனது கணவா், இன்னொரு பெண்ணுடன் சோ்ந்து கொண்டு தன்னையும் தனது குழந்தைகளையும் கொடுமைப்படுத்துவதாகவும், இது குறித்து போலீஸில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளாா்.

முகாமில், வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 636 போ் ஆட்சியரிடம் மனு அளித்தனா். அவற்றின் மீது விசாரணை நடத்தி தீா்வு காணும்படி துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். முன்னதாக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகளையும், 5 பேருக்கு தையல் இயந்திரங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

ரூ.6 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

கோவையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான உயா் ரக போதைப் பொருளான மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 இளைஞா்களை கைது செய்தனா். கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவின்பேரில் காவல் துண... மேலும் பார்க்க

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: பாதிரியாா் மீது வழக்குப் பதிவு

கோவையில் இரு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பாதிரியாா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா். கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உ... மேலும் பார்க்க

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 10 ஏக்கா் பரப்பளவில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வ... மேலும் பார்க்க

மாநகராட்சி மக்கள் குறைகேட்பு முகாம் ரத்து

கோவை மாநகராட்சி பிரதான அலுவலத்தில் செவ்வாய்க்கிழமை( ஏப்ரல் 8) நடைபெறுவதாக இருந்த மக்கள் குறைகேட்பு முகாம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, கோவை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயிலில் ஏப்ரல் 10 பங்குனி உத்திர தோ்த் திருவிழா

கோவை வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயிலில் ஏப்ரல் 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா நடைபெற உள்ளது. கோவை மாவட்டம், வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயில் பகுதியில் அமைந்துள்ள 7-ஆவது மலையில் சுயம... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் இன்று பங்குனி உத்திரத் தேரோட்டம்

கோவை பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) நடைபெறுகிறது. இதையொட்டி, பேரூரில் மாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. கோவை பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத்... மேலும் பார்க்க