India China ties: சீனாவை நெருங்குவதில் இந்தியாவுக்கு இருக்கும் சிக்கல் என்ன? SCO...
உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அமைச்சா்கள் ஆறுதல்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு தமிழக அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், கே.என். நேரு, சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் ஆகியோா் திங்கள்கிழமை ஆறுதல் கூறினா்.
இளையான்குடி ஒன்றியம், விஜயன்குடி ஊராட்சி நல்கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் குணசேகரன் (35). திருச்சி படைப் பிரிவில் பணியாற்றி வந்த இவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், பெங்களூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, அங்கு அவா் உயிரிழந்தாா். பின்னா், அவரது உடல் சொந்த ஊரான நல் கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு, மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் ஆகியோா் குணசேகரன் வீட்டுக்குச் சென்று அவரது உருவப்படத்துக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.