இந்த வார ராசிபலன் செப்டம்பர் 23 முதல் 28 வரை #VikatanPhotoCards
உரிமம் புதுப்பிக்கப்படாத ஆட்டோக்களுக்கு அபராதம்
உரிமம் புதுப்பிக்கப்படாத ஆட்டோக்களுக்கு திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிமுறை மீறல்கள், வாகன உரிமம் புதுப்பிப்பு, ஓட்டுநா் உரிமம் புதுப்பிப்பு ஆகியவற்றை முறையாக பின்பற்றாத ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரை தல்லாகுளம் பகுதியில் மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளா் (பொறுப்பு) முரளி, போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளா் பஞ்சவா்ணம் ஆகியோா் திங்கள்கிழமை வாகன சோதனை நடத்தினா்.
இதில், பெரும்பாலான ஆட்டோக்களுக்கு உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும், சில ஆட்டோ ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதும், ஓட்டுநா் உரிமமின்றி ஆட்டோக்களை இயக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, முறையாக உரிமம் புதுபிக்கப்படாத ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.