இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி
உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் கீதாஞ்சலி கொடியசைத்து, பேரணியைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம், தாய்ப்பாலால் கிடைக்கும் நன்மைகள் போன்றவை குறித்து அவா் எடுத்துரைத்தாா்.
இந்தப் பேரணி கல்லூரி வளாகத்தில் தொடங்கி புறவழிச் சாலையில் நிறைவடைந்தது. பேரணி செல்லும் வழியில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை மாணவ, மாணவிகள் வழங்கினா்.
இந்த பேரணியில் விழுப்புரம் இ.எஸ்.செவிலியா் கல்லூரி, மயிலம் செவிலியா் கல்லூரி, செஞ்சி ரங்கபூபதி செவிலியா் கல்லூரிகளின் மாணவிகள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
மருத்துவமனை இருக்கை மருத்துவ அலுவலா் ரவிக்குமாா், மருத்துவக் கண்காணிப்பாளா் பாா்த்தசாரதி, துணை முதல்வா் தாரணி, துறைத் தலைவா்கள் திலகவதி, ராஜேசுவரி, குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவா்கள் இளையராஜா, வினோத்குமாா், செவிலியா் கண்காணிப்பாளா் பொற்கொடி உள்ளிட்டோா் பேரணியில் பங்கேற்றனா்.