Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயர் சூட்டி...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 13) அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி லார்ட்ஸ் திடலில் வருகிற ஜூன் 11 தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: விராட் கோலியின் ஓய்வால் பாதுகாப்பாக இருக்கும் சச்சினின் சர்வதேச சாதனை!
ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
அடுத்த மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், அந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 13) அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிராக விளையாடிய வீரர்களே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
பாட் கம்மின்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்துகிறார். இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். காயத்திலிருந்து மீண்டுள்ள கேமரூன் கிரீனும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இதையும் படிக்க: ஒரு சகாப்தத்தின் முடிவு: கிரிக்கெட் உலகின் பாராட்டு மழையில் விராட் கோலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸி. அணி விவரம்
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலாண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஸ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மாட் குன்ஹிமேன், மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
The Australian squads are in for the World Test Championship Final and the West Indies Test tour: https://t.co/WH8D86EqRipic.twitter.com/MikVgS6YC2
— cricket.com.au (@cricketcomau) May 13, 2025
ரிசர்வ் வீரர்: பிரண்டன் டாக்கெட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.