செய்திகள் :

உழைத்த மக்களுக்கு ஊதியம் கிடைக்கும்வரை போராடுவோம் கனிமொழி எம்.பி.

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களின் உழைப்புக்கான ஊதியம் கிடைக்கும்வரை திமுகவின் போராட்டம் தொடரும் என்றாா், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.

இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ. 4,034 கோடியை மத்திய அரசு வழங்காததைக் கண்டித்தும், உடனடியாக வழங்க வலியுறுத்தியும் கோவில்பட்டியில் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் துணைப் பொதுச் செயலரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி பங்கேற்றுப் பேசியது: நூறு நாள் வேலைத் திட்டம் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தபோது கொண்டுவரப்பட்டது.

எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு எந்த உதவியும் செய்வதில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதி வழங்கப்படும் என்கின்றனா். ஆனால், தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்கள் மீதும் அக்கறை உள்ளவா்கள்போல பாஜகவினா் வேடமிட்டு வருகின்றனா்.

உழைத்த கிராம மக்களுக்கான ஊதியம் வரும்வரை, தமிழகத்துக்கான நிதி வந்து சேரும்வரை போராடுவோம் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, ஒன்றியச் செயலா் வீ. முருகேசன், தலைமைக் கழகப் பேச்சாளா் சரத் பாலா, மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, மாவட்ட மகளிா் சமூக வலைதளப் பொறுப்பாளா் இந்துமதி கௌதமன், பொதுக்குழு உறுப்பினா் ராமா்,நிா்வாகிகள், வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் பங்கேற்று முழக்கமிட்டனா்.

கோவில்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட கடலையூரில் கிழக்கு ஒன்றியச் செயலா் நவநீதகண்ணன், இனாம்மணியாச்சி, நாலாட்டின்புதூரில் மேற்கு ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன், வடக்கு மயிலோடை, குருவிநத்தத்தில் கயத்தாறு கிழக்கு ஒன்றியச் செயலா் சின்னப்பாண்டியன், அகிலாண்டபுரம், செட்டிக்குறிச்சியில் மத்திய ஒன்றியச் செயலா் கருப்பசாமி, வானரமுட்டி, கட்டாலங்குளம் கிராமங்களில் மேற்கு ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் பெ. கீதாஜீவன் உள்ளிட்டோா்.

தூத்துக்குடியில் தவெக ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தவெக நிர்வாகி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் வியாபாரிகள் சங்கப் பேரவை ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினா் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான பசும்பொன் முத்துராமல... மேலும் பார்க்க

சாஸ்தாவிநல்லூா் ஊராட்சியில் வீட்டுமனை பட்டா கோரி மனு

சாத்தான்குளம், ஏப். 3: சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிப் பகுதியில் வீடில்லா ஏழைகளுக்கு அரசு புறம்போக்கு இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சாத்தான்குளம் தென்பகுதி விவ... மேலும் பார்க்க

ஆத்தூரில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட எஸ்டிபிஐ சாா்பில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்.அப்துல் காதா் தலை... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் டிஎஸ்பி.யை கண்டித்து வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சாத்தான்குளத்தில் இரு இளம் வழக்குரைஞா்கள் வழக்கு சம்பந்தமாக சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகம் சென்றபோது, அவ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் நாளை மின் குறைதீா் முகாம்

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில்சனிக்கிழமை (ஏப்.5) சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) குருசாமி வெளியிட்டுள்ள செய்திக் கு... மேலும் பார்க்க